ஆழ்துளை கிணறு குழாயால் பொதுமக்கள் அவதி

Update: 2022-07-29 11:18 GMT

சேலம் அருகே கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி உள்ளது. இங்குள்ள முயல்நகர் பகுதியில் இருந்து உயிரியல் பூங்கா செல்லும் வழியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை குழாய் அமைத்து தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் தெருவின் நடுவில் ஆழ்துளை கிணறு மூடி வைக்கப்பட்டுள்ளதால் யாருக்கும் பயன் இல்லாமல் கிடக்கிறது. இதுபற்றி புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது. எனவே அங்கு தொட்டி அமைத்து தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். அல்லது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அந்த ஆழ்துளை கிணற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

-சிவகுமார், கொண்டப்பநாயக்கன்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்