குடிநீர் வசதி தேவை

Update: 2022-07-26 17:53 GMT

சேலம் டவுன் ெரயில் நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். பயணிகளின் வசதிக்காக அங்கு 5-க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்கள் உள்ளன. இந்த நிலையில் அங்குள்ள குடிநீர் குழாய்கள் பெரும்பாலும் சேதம் அடைந்து காணப்படுகின்றன. இதனால் பயணிகள் குடிநீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சேதம் அடைந்த குடிநீர் குழாய்களை சீரமைத்து பயணிகளின் தாகத்தை தீர்க்க ெரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-யோகேஷ், பேர்லேண்ட்ஸ், சேலம்.

மேலும் செய்திகள்