திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி கிராமப்புற மக்கள் மனு அளிக்க வாரந்தோறும் வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் மக்கள் தாகத்தை தணிக்கும் வகையில் குடிப்பதற்கு குடிநீர் வசதி இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் திருவாரூர்