சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாததால் குடிநீரில் பாசி வருகிறது. மேலும் பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் ஒன்று அமைக்கப்பட்டது. 2 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுபற்றி புகார் அளித்தும் பலன் இல்லை. மாணவர்கள் நலன் கருதி குடிநீர் தொட்டியை பராமரிக்கவும், குடிநீர் எந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சசிரேகா, தேவூர், சேலம்.