வீணாகும் குடிநீர்

Update: 2023-04-09 17:33 GMT

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் கச்சுப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட தெற்கு மூப்பரன் தெருவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் தொட்டி தற்போது சேதம் அடைந்து தண்ணீர் வீணாகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதம் அடைந்த குடிநீர் தொட்டியை அகற்றி புதிய குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்.

-வீரதேவன், கச்சுப்பள்ளி, சேலம்.

மேலும் செய்திகள்