தடுப்பணை விரைந்து கட்டிமுடிக்கப்படுமா?

Update: 2022-07-18 11:53 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வெள்ளப்பள்ளம் உப்பனாறு உள்ளது. இந்த ஆற்றின் இருகரைகளிலும் ஆதமங்கலம், பணமங்கலம், சட்டநாதபுரம், சீர்காழி ,திட்டை, புதுத்துறை ,வெள்ளப்பள்ளம், திருமுல்லைவாசல் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த உப்பனாற்றால் கரையோரம் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருகிறது .மேலும் விவசாயிகள் இந்த நீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உப்பனாற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள், சட்டநாதபுரம்

மேலும் செய்திகள்