காட்சி பொருளான குடிநீர் தொட்டி

Update: 2022-07-16 16:19 GMT

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த கோனேரிப்பட்டி அக்ரஹாரம் கிராமம் பொன்னம்பாளையத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் இது வரை அது பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாகவே உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அருள், பொன்னம்பாளையம், சேலம்.

மேலும் செய்திகள்