நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சின்ன தேர்நிலை அருகில் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. அதன் கீழ் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. காலப்போக்கில் அந்த கட்டிடம் பழுதானதால் அங்கன்வாடி மையம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடிக்காமல் வைத்துள்ளனர். இந்த தொட்டி இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த தொட்டியை இடிக்க வேண்டும்.
-சஞ்சீவி, சேந்தமங்கலம், நாமக்கல்.