திண்டுக்கல்லில், பழைய கரூர் சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரி அருகே சாலையோரம் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் கடந்த வாரம் உடைப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கடந்த ஒருவாரமாக குழாயில் இருந்து வெளியேறும் குடிநீர் சாலையில் வீணாக செல்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்ய வேண்டும்.