நாகை அருகே கருவேலங்கடை ஊராட்சியில் மாரியம்மன் கோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு, சீராளம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சரியாக வரவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்டஅதிகாரிகள் உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பக்கிரிசாமி, கருவேலங்கடை