தற்காலிக பாலத்தை அகற்ற வேண்டும்

Update: 2022-09-17 09:17 GMT

தாழக்குடி பேரூராட்சி சந்தவிளையில் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் பணி நடைபெற்ற போது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. தற்போது புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. ஆனால், பழைய தற்காலிக பாலத்தை இதுவரை அகற்றவில்லை. இந்த பாலத்தின் மேல்பகுதியில் ஆற்றில் வெள்ளம் தேங்கி நின்று அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகும் நிலை உள்ளது. இதனால், அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்கள் சேதமடையும் அபாய ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் நலன்கருதி தற்காலிக பாலத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.எஸ்.சிதம்பரதாணு, தாழக்குடி.

மேலும் செய்திகள்