குழாய் உடைப்பு சரி செய்யப்படுமா ?

Update: 2022-09-12 11:35 GMT


நாகை மாவட்டம் திட்டச்சேரியில் இருந்து திருமருகல் செல்லும் காந்தி சாலை மெயின் ரோட்டில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் முழுவதும் வீணாகி சாலையில் செல்கிறது. இதனால் ஒரு சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திட்டச்சேரி.

மேலும் செய்திகள்