சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா தும்பல் ஊராட்சி மாமாஞ்சி சாலையில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் காலை நேரங்களில் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே இந்த குடிநீர் தொட்டியை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தும்பல் பூவிழி, சேலம்.