சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு போக்குவரத்து கழக பணிமனை ரோட்டில் பிள்ளையார் கோவில் பின்புறம் எழில்நகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் குழாய் உடைந்து வீணாக சாக்கடையில் கலக்கிறது. இதுகுறித்து பல முறை புகார் கொடுத்து இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரேம், சேலம்.