குடிநீர் வசதி வேண்டும்

Update: 2022-07-12 14:47 GMT

நாகை மாவட்டம் ஆழியூர் ஊராட்சியில் கீழத்தெரு, புதுதெரு , ஆகியவை உள்ளன. இந்த தெருக்களில் கடந்த சில நாட்களாக குடிநீர் வருவதுஇல்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பல மைல் தூரம் சென்று தண்ணீர் பிடித்து வரும் நிலை உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகவும் அவதிப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆழியூர், பொதுமக்கள்

மேலும் செய்திகள்