தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 2019-20-ம் ஆண்டு அரசு பள்ளி மாணவர் விடுதி அருகில் கட்டப்பட்டது. இதுவரை அந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகராஜ், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.