மழைநீர் வடிகால் வசதி

Update: 2022-09-08 17:06 GMT

சேலம் மாவட்டம் ஓமலூரில் கஞ்சநாயக்கன்பட்டியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் கோட்டைமேடு பகுதியில் முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் அந்த பகுதியில் நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் முறையான மழைநீர் வடிகால் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தங்கராஜ், சேலம்.

மேலும் செய்திகள்