தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா கொலசனஅள்ளி ஊராட்சி மன்ற கட்டிடத்தின் முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டி சேதமடைந்து தண்ணீர் வெளியேறி அந்த பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், அந்த வழியே செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை அகற்றி விட்டு புதிய குடிநீர் தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நிரஞ்சன், கொலசனஅள்ளி, தர்மபுரி.