குடிநீர் வசதி வேண்டும்

Update: 2022-09-07 12:37 GMT


நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட ஓரடியபுலம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்சினை தலை விரித்தாடுகிறது. இப்பகுதியில் குடிநீர் வசதி இல்லை இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி ஒரடியபுலம் பகுதியில் குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ஒரடியபுலம்

மேலும் செய்திகள்