சேலம் கருப்பூர் பேரூராட்சி தட்டாஞ்சாவடி பள்ளம் பழைய பால் சொசைட்டி தெருவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இங்கு மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் கொசு தொல்லையும், நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-பாபுகுமார், கருப்பூர், சேலம்.