சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் அருகே போடிநாயக்கன்பட்டி ெரயில்வே சுரங்கப்பாதை சில வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதை வழியாக 4 கிராமத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுரங்கப்பாதையில் 24 மணி நேரமும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வீரகுமார், சேலம்.