தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கும் நிலை உள்ளது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தாழ்வான பகுதியை சமன் செய்து இனிவரும் காலங்களில் மழை நீர் தேங்கி நிற்காமல் இருக்க மாணவ மாணவிகளின் நலன் கருதி துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சம்பந்தம், தர்மபுரி.