சேலம் சீலநாயக்கன்பட்டி 60-வது வார்டில் திருச்சி மெயின் ரோட்டில் தட்சிண மூர்த்தி கோவில் அருகில் உள்ள குடிநீர் குழாய் உடைந்துள்ளது. கடந்த 5 மாதத்திற்கும் மேலாக குடிநீர் குழாய் உடைந்து வீணாக சாலையில் செல்கிறது. இதுகுறித்து பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் இந்த குடிநீர் குழாயை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சூர்யா, சேலம்.