வீணாகும் குடிநீர்

Update: 2022-08-29 16:19 GMT

தர்மபுரி மாவட்டம் பாகலஅள்ளி ஊராட்சி பச்சியப்பன்கொட்டாய் கிராமத்தில் குடியிருப்பு மக்களின் குடிநீர் தேவைக்காக, அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் சேதமடைந்து உள்ளது. இதனால் குடிநீர் குழாய்களில் மரக்குச்சிகளை சொருகி வைத்துள்ளனர். மேலும் அதிகளவில் குடிநீர் வீணாகிறது. எனவே சேதமடைந்த குடிநீர் குழாயை சரிசெய்து பாதுகாப்பான முறையில் குடிநீர் வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சற்குணம், தர்மபுரி.

மேலும் செய்திகள்