திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் நுணாக்காடு ஊராட்சி ஆட்டூர் கிராமத்தில் விநாயகர் கோவில் பழமையான குடிநீர் நீர் தேக்க தொட்டி உள்ளது. இது தற்போது பயனற்ற நிலையில் உள்ளது. இந்த தொட்டியானது பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அதை இடித்து விட்டு புதிய குடி நீர் தொட்டி கட்டி தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பொதுமக்கள்,திருவாரூர்