சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பேரூராட்சி சந்தப்பேட்டையை அடுத்த மாதேஸ்வரன் காம்ப்ளக்ஸ் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் போதிய தண்ணீர் இல்லாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஏத்தாப்பூர் பேரூராட்சி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அடிக்கடி உடையும் குடிநீர் குழாயை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தவிர்க்க வேண்டும்.
-ஊர்மக்கள், ஏத்தாப்பூர், சேலம்.