நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி அருகே நாகூர்-நன்னிலம் சாலை வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் மூலம் நாகூர்,நாகப்பட்டினம்,வேளாங்கண்ணி,வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் பனங்குடி பிராவடையான் ஆற்றின் பாலத்தில் கொள்ளிடம் குடிநீர் குழாயில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் குடிநீர் அதிக அளவில் வெளியேறி ஆற்றில் கலந்து வீணாகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருமருகல்