சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த துட்டம்பட்டி ஊராட்சி வணிச்சம்பட்டி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த குடிநீர் தொட்டியில் விரிசல் ஏற்பட்டு சிமெண்டு பூச்சுகள் விழுகின்றன. இதுபற்றி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை. அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுத்து இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு, புதிய குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சித்தேஸ்வரன், வணிச்சம்பட்டி, சேலம்.