மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மருத்தூர் ஊராட்சி மருத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே குடிநீர் தேக்க தொட்டி மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. அருகில் வீடுகள் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், குத்தாலம்