தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கும்மனூர் ஊராட்சி நமாண்டஅள்ளி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. அந்த தண்ணீர் தொட்டிக்கு நீரேற்றும் மோட்டார் பழுதாகி பயன்பாடின்றி உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் போதிய தண்ணீர் இன்றி கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதான மின் மோட்டாரை சரி செய்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும்.
-செல்லதுரை, நமாண்டஅள்ளி, தர்மபுரி.