தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பஸ் நிறுத்தம் இடத்தில் மழைநீர் கால்வாய் சீரமைக்கப்படாததால் அந்த பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. அதன்காரணமாக பயணிகள், இருசக்கர வாகனங்கள், பொதுமக்கள் கடும் சீரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி மழைநீர் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முரளி, நல்லம்பள்ளி, தர்மபுரி.