சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கல்பகனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வசிஷ்ட நதியின் குறுக்கே தடுப்பணை கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடம் தேர்வு செய்தும் பணி தொடங்காமல் அப்படியே கிடப்பில் போட்டு உள்ளனர். ஆனால் அந்த பகுதி விவசாயிகள் கிணற்றுப்பாசனத்தை நம்பி உள்ளனர். தடுப்பணை கட்டினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வதற்கு கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படும். இதனால் விவசாயம் செய்வதற்கும், குடிநீர் தேவைக்கும், வீணாகும் நீரை சேமிப்பதற்கும் இந்த தடுப்பணை மூலம் பயன் பெற முடியும். எனவே தடுப்பணை கட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுந்தர், கல்பகனூர், சேலம்.