வடிகால் வசதி வேண்டும்

Update: 2022-08-25 14:27 GMT

வடிகால் வசதி வேண்டும்

தஞ்சை மேல வீதியில் மூலை அனுமார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த நிலையில் மழை பெய்தால் வடிகால் வசதி இல்லாததால் மழை காலத்தில் மழை தண்ணீர் கோவிலுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கோவிலுக்குள் மழை தண்ணீர் செல்லாதபடி வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மேலவீதி.

மேலும் செய்திகள்