திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் அகரதிருமாளம் கிராமத்தில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளன. இதனால் விளைந்த நெற்பயிர்கள் சேதமடைந்து உள்ளன. இதனால் விவசாயிகள் மன வேதனை அடைந்துள்ளனர். அருகில் கால் வாய் உடைந்து சேதமடைந்து இருப்பதால் மழைத்தண்ணீர் வயலுக்குள் பாய்ந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள், நன்னிலம்
=====================