ஆபத்தான நிலையில் குடிநீர் தொட்டி

Update: 2022-08-22 18:02 GMT

சேலம் வட்டமுத்தாம்பட்டி ஊராட்சியில் ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த தொடக்கப்பள்ளி வளாகத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இங்கிருந்து வட்டமுத்தாம்பட்டி புது காலனி 1,2 ஆகிய வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கான்கிரீட் தூண்கள் பெயர்ந்து பழுதடைந்து காணப்படுகிறது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள் எந்த நேரமும் தண்ணீர் தொட்டி பகுதியில் நடமாடுகின்றனர். அருகில் பொதுமக்களின் குடியிருப்பும் உள்ளது. எனவே பழுதடைந்த கான்கிரீட் தூண்களை சரி செய்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, வட்டமுத்தாம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்