திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அருகே மகமாய்திருமணி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்துக்கு சேத்துப்பட்டு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் சேத்துப்பட்டு, வயலூர் வழியாக மடம், தேசூர், மகமாய் திருமணி வரை அரசு டவுன் பஸ் இயக்கினால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும். போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசு டவுன் பஸ் இயக்க முன் வரவேண்டும்.
-மண்ணுசுருட்டை, மகமாய்திருமணி.