உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி- திருச்சி செல்லும் சாலையை சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் சாலையிலேயே தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.