விதிகளை மீறும் ஆட்டோக்கள்

Update: 2026-07-12 15:54 GMT

உத்தமபாளையம், கம்பம், கூடலூர் பகுதிகளில் இயக்கப்படும் வாடகை ஆட்டோக்கள் அதிவேகமாகவும், அதிக ஒலி எழுப்பியும் சாலையில் குறுக்கும், நெடுக்குமாக விதிகளை மீறி செல்கின்றன. மேலும் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களும் பயணிக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அதிவேகமாக ஆட்டோக்களை இயக்குபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்