பஸ் வசதி வேண்டும்

Update: 2026-07-12 14:08 GMT

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை, சேதுராப்பட்டி பிரிவில் உள்ள அரசு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு போதிய பஸ் வசதி இல்லாததால், மாணவர்கள் கல்லூரிக்கு தாமதமாக செல்லும் நிலை உள்ளதால், அவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் விடுமுறை நாட்காள் முடிந்து கல்லூரிக்கு வரும்போது பைகளை சுமக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே, இவ்வழியாக இரு மார்க்கங்களிலும் செல்லும் அனைத்து பஸ்களும் சேதுராப்பட்டி நிறுத்தத்தில் நின்று செல்ல சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்