நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் இறைச்சிக்கடைகள் அதிகமாக இயங்கி வருகின்றன. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் சற்று கூடுதலாக அந்த கடைகளில் கூட்டம் காணப்படுகிறது. கடைக்கு வரும் பொதுமக்கள் பலரும் தங்களது இருசக்கர வாகனத்தை சாலையின் மையப்பகுதி வரை நிறுத்துகின்றனர். இதனால் அங்கு விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.