பயணிகள் அவதி

Update: 2026-07-12 07:37 GMT

 நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து பூதப்பாண்டி, தோவாவளை, ஆரல்வாய்மொழி ஆகிய ஊர்களுக்கு செல்லும் 4, ,4 ஏ, 4 பி, 4 சி, 4 டி, 4 இ உள்ளிட்ட அனைத்து அரசு பஸ்களும் மணியடிச்சான்கோவில், ஒழுகினசேரி, வடசேரி, வெள்ளமடம், தோவாளை வழியாக செல்லும். தற்போது ஒழுகினசேரி பகுதியில் ரெயில்வே பாலம் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு அரசு பஸ்கள் மாற்றுப்பாதையில் செல்கின்றன. அதன்படி பஸ்கள் கோட்டார், செட்டிகுளம், கலெக்டர் அலுவலகம், வடசேரி வழியாக செல்கிறது. ஆனால் அந்த வழித்தடத்தில் செல்லும் பயணிகளை நடத்துடனர்கள் ஏற்றிச் செல்வதில்லை. எனவே, மாற்றுப்பாதையில் செல்லும் பஸ்களிலும் அந்த வழித்தடத்தில் இறங்க வேண்டிய பயணிகளை ஏற்றிச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்திகேயன், சீதப்பால்.

மேலும் செய்திகள்