சுந்தரபாண்டியபுரம்- சுரண்டை மெயின் ரோட்டில் கிழக்கே ரேஷன் கடை முன்பாக கீழ்பக்கம் போக்குவரத்துக்கு இடையூறாக தடுப்புச்சுவர் உள்ளது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தடுப்புச்சுவரில் மோதும் அபாயம் உள்ளது. எனவே தடுப்புச்சுவரில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும், அல்லது அதனை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.