குமுளி, கம்பம் பகுதிகளில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் உத்தமபாளையம் நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாகவே சென்றுவிடுகின்றன. இதனால் உத்தமபாளையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்காக உத்தமபாளையம் பஸ் நிலையம் வரும் பயணிகள் பஸ்கள் கிடைக்காமல் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் உள்ளது. எனவே உத்தமபாளையம் நகருக்குள் அனைத்து அரசு பஸ்களும் வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.