ஊட்டி ஏ.டி.சி. பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் அந்த சாலையில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்படுகிறார்கள். அத்துடன் விபத்து ஏற்படும் அபாயமும் காணப்படுகிறது. எனவே கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.