பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லெப்பைகுடிகாடு பேரூராட்சியில் இருந்து அகரம்சீகூர் கிராமத்திற்கு மதிய நேரங்களில் அரசுப் பஸ்கள் அடிக்கடி இயக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் அதிகக் கட்டணம் கொடுத்து ஷேர் ஆட்டோக்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி மதிய வேளையிலும் தடையின்றிப் பஸ்களை இயக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.