அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கடைவீதி பகுதியில் சென்னை-கும்பகோணம் மற்றும் சிதம்பரம் சாலைகளில் மாலை நேரங்களில் கால்நடைகள் அதிகளவில் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி, உயிரிழப்பு ஏற்படும் அவல நிலை உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சாலைகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.