அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் குணமங்கலம் பகுதியில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு ஸ்ரீபுரந்தான் வழியாகக் கும்பகோணம் செல்கின்றன. பள்ளி நேரங்களில் அதிகமாக இயக்கப்படும் இந்த லாரிகளில் தார்ப்பாய் போர்த்தப்படாததால், மண் பறந்து விழுந்து பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். விபத்து மற்றும் மூச்சுத்திணறல் அபாயத்தைத் தவிர்க்க, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.