கரூரில் இருந்து செல்லாண்டிபாளையம், மணல்மேடு, ஆறுரோடு, வெஞ்சமாங்கூடலூர் வழியாக ஆத்துமேடு வரை இயக்கப்படும் நகரப் பஸ்சை கூடுதலாகத் துவக்கம்பாறை, செந்தாம்பட்டி, குல்லமாபட்டி வழியாக ஈசநத்தம் வரை நீட்டித்து இயக்க வேண்டும். இந்த வழித்தடங்களில் போதிய பஸ் வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் தினசரி பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த பஸ் வழித்தடத்தை ஈசநத்தம் வரை நீட்டித்து இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.