விழுப்புரம் ரெயில் நிலையம் நுழைவுவாயில் அருகே உள்ள சாலை கடும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சிறுமழை பெய்தால் கூட தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இவ்வழியாக வரும் வாகனஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளம் தெரியாமல் அதில் இடறி விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். மேலும் வாகனங்களும் அடிக்கடி பழுதடைவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சாலை பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.