பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் சாலையின் ஓரம் பழக்கடை, பூக்கடை மற்றும் இறைச்சிக் கடைகள் உள்ளன. அங்கு வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையிலேயே தாறுமாறாக நிறுத்துகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள், பாதசாரிகள் கடும் அவதியடைகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.